பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சியான செயல்; குவியும் பாராட்டுக்கள்

0
469

பாடசாலை மாணவர் ஒருவருக்கு பொலிஸ்  அதிகாரி ஒருவர் உணவு ஊட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விபத்தொன்றில் படுகாயமடைந்த மாணவர் ஒருவருக்கு நவகமுவ பொலிஸ் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் லக்ஷ்மன் டி சில்வா உணவூட்டும் புகைப்படமே இவ்வாறு வைரலாகியுள்ளது.

இன்று காலை கடுவலை முனிதாச குமாரதுங்க வித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த மாணவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

இதன்போது நவகமுவ பொலிஸ் பரிசோதகர் பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்தார்.

விபத்தை நேரில் பார்த்த அவர்,  மாணவனை வாகனத்தில்  ஏற்றி நவகமுவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

சிகிச்சை அளித்த பின்னர், குறித்த மாணவன் பசியுடன் இருந்தமையினால், உணவகத்திற்கு அழைத்துச் சென்று உணவு வாங்கி ஊட்டிவிட்டுள்ளார்.

பின்னர் மாணவனின் பெற்றோரை வரவழைத்து, மாணவரை அவர்களின் பொறுப்பில் ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருவதுடன், சீருடைக்கு அப்பாற்பட்ட மனிதநேயம் என குறித்த பொலிஸ் அதிகாரியை பாராட்டி வருகின்றனர்.