உலகின் மிக நீளமான கார் என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்கா படைத்துள்ளது.
அமெரிக்கன் ட்ரீம் என்று அழைக்கப்படும் இந்த கார் 100 அடி மற்றும் 1.5 அங்குல நீளம் கொண்டது. 26 சக்கரங்களைக் கொண்ட இந்த காரில் நீச்சல் குளம், சிறிய கோல்ஃப் மைதானம், ஷவர் மற்றும் ஹெலிகாப்டர் தரையிறங்கு தளம் ஆகியவை அடங்கும்.
இந்த கார் முதன்முதலில் கின்னஸ் புத்தகத்தில் 1986 இல் பட்டியலிடப்பட்டது.