உக்ரைன் விரைவில் நேட்டோவில் இணைய வாய்ப்புள்ளதா? போரிஸ் ஜான்சன் கூறியதாவது

0
354

உக்ரைன் விரைவில் நேட்டோவில் இணைய வாய்ப்புள்ளதா என்பது குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெளிவுப்படுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, ஜெலன்ஸ்கி தங்களுடைய கோரிக்கையை ஏற்றால் உடனே தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் எக்காலத்திலும் நேட்டோவில் இணையக்கூடாது என்பது ரஷ்யாவின் கோரிக்கைகளில் முக்கியமானதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கான அதன் முயற்சியை கைவிடலாம் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நேற்று கூறினார்.

ஜெலன்ஸ்கியின் கருத்து குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது, நேற்று ஜெலன்ஸ்கியிடம் நான் மீண்டும் பேசினேன், அவர் நேட்டோ மற்றும் உண்மையான நிலைமை குறித்தும் கூறியதை நான் புரிந்துக்கொள்கிறேன்.

உக்ரைன் நோட்டோவில் விரைவில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை, இதை நாங்கள் புடினுக்கு தெளிவுப்படுத்திவிட்டோம்.

ஆனால் இந்த முடிவு உக்ரைனுக்கும் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்காக தான். பிரித்தானியா அவர்களுக்கு ஆதரவளிக்கும் என போரிஸ் ஜான்சன் கூறினார்.