இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் கொழும்பில் இதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக இடம்பெற்றுவருகின்றன.
முப்படையினரின் இராணுவ அணிவகுப்பு ஒத்திகைகளுக்காக முக்கியமான சில வீதிகள் மூடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை விமானப்படையினரின் விமான அணிவகுப்புக்களுக்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன