நடப்பு ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப்- நவால்னியின் பெயர்கள் பரிந்துரை!

0
564

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுக்கு மூன்று முக்கிய நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசை வென்றவர்கள் ஆகியோர், 2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்கு தகுதி உடையவர் என தாங்கள் நினைக்கும் பெயர்களை நோர்வே நோபல் குழுவிடம் பரிந்துரை செய்துள்ளனர்.

இதன்படி, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தவிர உலக பொது சுகாதார அமைப்பு, இனவெறிக்கு எதிரான இயக்கமாக உருவாகிய ‘டீடயஉம டுiஎநள ஆயவவநச’ ஆகிய பெயர்களும் நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை நோர்வே நோபல் குழு பரிசீலனை செய்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம், நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவிக்கும்.

கடந்த ஆண்டு ஐ.நா.வின் உலக உணவு திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.