சீன-ரஷ்யா உருவாக்கிய கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் ஜேர்மனி சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

0
698

தற்போதைய பற்றாக்குறையை சமாளிக்க சீனா மற்றும் ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் ஐரோப்பாவில் பயன்படுத்தலாம் என்று ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை சமாளிக்க ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் திங்கள்கிழமை உச்சி மாநாட்டை நடத்த உள்ளார்.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றிய ஒப்புதல் பெற்றால் ரஷ்யாவின் Sputnik V மற்றும் சீனாவின் Sinopharm தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை என்று ஜேர்மனி சுகாதார அமைச்சர் Jens Spahn கூறியுள்ளார்.

தடுப்பூசி தயாரிக்கப்படும் நாட்டைப் பொருட்படுத்தாமல், அவை பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தால் போதும், அவை தொற்றுநோயைச் சமாளிக்க உதவும்.

சீன மற்றும் ரஷ்யா உருவாக்கிய கொரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்

துவதற்கு எந்த அடிப்படை தடையும் இல்லை என்று Jens Spahn கூறினார்.

இந்த ஆண்டில் தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று Jens Spahn நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசிக்கான ஒப்புதலுக்கான விண்ணப்பம் ஏற்கனவே ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.