தேசிய கிரிக்கெட் வீரர்களின் ஊதியத்தை குறைப்பதற்கு தீர்மானம்

0
488

இலங்கை கிரிக்கெட் தனது தேசிய வீரர்களின் ஊதியத்தை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய வீரர்கள் ஒப்பந்தத்தின்படி, முதலாம் தர வீரருக்கு ஆண்டுக்கு 125,000 அமெரிக்க டொலர்களும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர வீரர்களுக்கு முறையே 80,000 அமெரிக்க டொலர்களும், 60,000 அமெரிக்க டொலர்களும் ஊதியமாக வழங்கப்படுகிறது.

அதேநேரம் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ஒரு வீரருக்கு மேலதிகமாக 5000 அமெரிக்க டொலர்களும், இலங்கை போட்டியை வென்றால் அத் தொகை 7,500 அமெரிக்க டொலர்களாகவும் வழங்கப்படுகிறது.

இந் நிலையில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் ஷம்மி சில்வா வீரர்களுக்கான எதிர்கால கொடுப்பனவுகள் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இலங்கை 2018 முதல் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அவற்றில் 11 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதடன், நான்கில் மாத்திரம் பெற்று பெற்றுள்ளது.

அதேநேரம் குறித்த காலக் கட்டத்தில் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 10 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்று, 18 இல் தேல்வியடைந்துள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே வீரர்களுக்கான ஊதியம் குறைக்கப்பட்டு, செயற் திறனை அடிப்படையாக கொண்ட ஒரு புதிய சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் திறன்களின் அடிப்படையில் ஊதியம் வழங்க புதிய திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.