திருமணமான 28 நாளில் கழிப்பறையில் இறந்த புதுப்பெண்! அடுத்த சில நாட்களில் கோழிப்பண்ணையில் உயிரிழந்த மாமியார்.. முழு பின்னணி

0
571

கேரளாவில் திருமணமான 28 நாளில் புதுப்பெண் வீட்டு கழிப்பறையில் இறந்த நிலையில் அடுத்த சில நாட்களில் அவர் மாமியாரும் உயிரிழந்துள்ளார்.

 

சரத் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் ஆதிரா (24) என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது.

 

திருமணத்துக்காக சரத் சொந்த ஊரான கேரளாவுக்கு வந்தார்.

 

இந்த நிலையில் திருமணமான 28 நாட்களில் ஆதிரா கணவர் வீட்டின் கழிப்பறையில் இறந்து கிடந்தார்.

 

அவர் கத்தியால் தன்னுடைய கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. அந்த சமயத்தில் ஆதிராவின் கணவர் வெளியில் சென்றிருந்தார் எனவும் தெரியவந்துள்ளது.