பல்வேறு பக்கவிளைவுகளைக் காட்டிவரும் கொரோனா, ஆண்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளதுடன், குழந்தை பாக்கியத்தை எதிர்பார்க்கும் தம்பதியரையும் கலங்கவைக்கும் பக்க விளைவு ஒன்றை ஏற்படுத்துவதாக ஜேர்மன் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஆம், உயிரணுக்கள் மீது கொரோனா வைரஸ் பலத்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜேர்மன் பல்கலைக்கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், கொரோனா தாக்கிய 84 இனப்பெருக்க வயதிலிருக்கும் ஆண்களின் உயிரணுக்கள் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன், உயிரணுக்களின் உருவம் 400 சதவிகிதம் மாற்றமடைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதால், அத்தகைய ஆண்கள் மனைவியை கருவுறச் செய்வதிலும் பிரச்சினை ஏற்படலாம் என்றும் வெளியாகியுள்ள தகவல், தம்பதியரையும் கலங்கச் செய்வதாக உள்ளது.