கனடாவில் கடந்த செவ்வாய்க்கிழமை மேலும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கனடாவில் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 47 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது. 122 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று உறுதியானோரில் 8 இலட்சத்து 41 ஆயிரத்து 224 குணமடைந்துள்ளதுடன் 90 ஆயிரத்து 76 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக கனேடிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.