சிறிலங்கா முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம்

0
381

சிறிலங்கா முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய ஆட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர், அதிக வேகமாக வாகனங்களைச் செலுத்துவோர், குடிபோதையில் வாகனங்களைச் செலுத்துவோர் போன்றவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதார விதிமுறைகளை மீறும் வகையில் ஆசனங்களின் எண்ணிக்கையைவிட கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.