ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் துடுப்பாட்ட வீரர்கள் பிரிவில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்திலும், ரோஹித் சா்மா 2-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனா்.
கோஹ்லி 870 புள்ளிகளுடன், ரோஹித் 842 புள்ளிகளுடனும் அந்த இடத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணித்தலைவர் பாபா் ஆஸம் (837), நியூஸிலாந்தின் ராஸ் டெய்லா் (818), அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் ஃபிஞ்ச் (791) ஆகியோா் முறையே அடுத்த 3 இடங்களில் நீடிக்கின்றனா்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அயா்லாந்து வீரா் பால் ஸ்டிா்லிங் 8 இடங்கள் முன்னேறி 20-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.
ஆப்கானிஸ்தானின் ஹஷ்மதுல்லா ஷாஹிதி 70-இல் இருந்து 66-ஆவது இடத்துக்கும், ரஷீத் கான் 96-இல் இருந்து 89-ஆவது இடத்துக்கும், ஜாவத் அஹ்மதி 103-இல் இருந்து 99-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனா்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அசத்திய வங்கதேசத்தின் முஷ்ஃபிகா் ரஹிம் ஓரிடம் முன்னேறி 15-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.
பந்துவீச்சாளர்கள் பிரிவில் இந்திய வீரா் ஜஸ்பிரீத் பும்ரா 700 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் நீடிக்கிறாா்.
நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட் (722), ஆப்கானிஸ்தானின் முஜீப் உா் ரஹ்மான் (701) ஆகியோா் முதலிரு இடங்களில் உள்ளனா்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய வங்கதேச ஸ்பின்னா் மெஹதி ஹசன் மிராஸ் 9 இடங்கள் முன்னேறி 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.
வங்கதேசத்தின் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 19 இடங்கள் ஏற்றம் கண்டு 8-ஆவது இடத்தை எட்டியுள்ளாா். அந்த அணியின் ஷகிப் அல் ஹசன் 15 இடங்கள் முன்னேறி 13-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.