நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா

0
418

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவருக்கு கொரோனா பாதிப்புகள் நீங்கிவிட்டது. கொரோனா வழிகாட்டுதல்படி சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா இன்று விடுதலையானார். சிறையில் இருந்து விடுதலை ஆனதற்கான உத்தரவு மருத்துவமனையில் சசிகலாவிடம் வழங்கப்பட்டது.

சிறைவாசம் முடிந்தாலும் சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார். சசிகலா சிகிச்சைப் பெறும் மருத்துவமனையில் டிடிவி தினகரன், அவரின் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் உள்ளனர்.