நெய் நல்லது தான்.. ஆனால் யார் யாரெல்லாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் தெரியுமா?

0
524

அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது.

நெய்யில் ஆரோக்கியமான அமிலம் மற்றும் வைட்டமின் பி 2, பி 12, பி 6, சி, ஈ உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்களும் கலந்திருக்கின்றன.

ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை மூளை, இதயம், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

மேலும், நெய்யில் கொழுப்பு கலந்திருந்தாலும் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் மற்ற எண்ணெய்களை விட சிறந்ததாக கருதப்படுகிறது. வயதுக்கு ஏற்ப உணவில் நெய் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானது.

எந்தெந்த வயதினர் எவ்வளவு நெய் எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் சில பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள்.

  • பருவ வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் தினமும் 2 தேக்கரண்டி நெய் சாப்பிடலாம்.
  • கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தின மும் 3 தேக்கரண்டி நெய் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • 7 மாதம் முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 முதல் 3 தேக்கரண்டி வரை நெய்யை உணவில் சேர்த்துக்கொடுக்கலாம்.
  • இதையடுத்து, 3 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் அதே அளவில் வழங்கலாம். 10 முதல் 17 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு 4 தேக்கரண்டி நெய்யும் கொடுக்கலாம்.
  • 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நெய் கொடுக்கக்கூடாது. தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும்.