சிறிலங்காவிலும் புதிய ஆபத்தான வைரஸ்

0
425

சிறிலங்காவில், பிரித்தானியாவில் பரவும் கொரோனா வைரஸை விட வித்தியாசமானதும் விரைவாக பரவக்கூடியதுமான கொரோனா வைரஸ் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, ஜேர்மன், டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் தற்போது இந்த கொரோனா வைரஸ் வகை பரவி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களின் மாதிரிகள் கடந்த வாரம் சோதனைகளுக்காக பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பணிப்பாளர், மருத்துவர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.

இந்த ஆய்வின் போது, இந்த வைரஸ் இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸிலிருந்து மாறுபட்ட தன்மையைக் கொண்டிருப்பதாகவும் B1.258 பரம்பரையைக் கொண்டது எனவும் தெரியவந்துள்ளது.

தடுப்பூசி மூலமான நோய் எதிர்ப்பு சக்திக்கு அச்சுறுத்தலான செயற்பாட்டைக் கொண்டிராததால், இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.