இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே பல வாரங்களாக நீடித்த கொந்தளிப்புக்குப் பின்னர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அவர் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9:00 மணிக்கு ஒரு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது அவர் ராஜினாமா செய்ய குய்ரினாலே (ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லாவின் அலுவலகம்) செல்ல விரும்புவதாக அமைச்சர்களுக்கு அறிவிப்பார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதால், இத்தாலியை நடத்துவதற்கு ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான புதிய தேர்தலை அவர் நாடுவார் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் கொரோனா தொற்று 85,000’க்கும் அதிகமான மக்களைக் கொன்று பொருளாதாரத்தை கடுமையாக முடக்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் மேட்டியோ ரென்சி தனது சிறிய இத்தாலியா விவா கட்சியின் ஆதரவை ஜனவரி 13 அன்று வாபஸ் பெற்றதிலிருந்து ஆளும் கூட்டணி சரிவின் விளிம்பில் உள்ளது.
கடந்த வாரம் பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கோன்டே தப்பிப்பிழைத்தார். எனினும் செனட், மேலவையில் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டார். இதனால் அவரது அரசாங்கம் கடுமையாக பலவீனமடைந்தது.
அவரது ராஜினாமா இந்த வார இறுதியில் நீதி சீர்திருத்தங்கள் குறித்த முக்கிய வாக்கெடுப்புக்கு முன்னதாக வந்துள்ளது.
இதன் மூலம் இத்தாலிய அரசாங்கம் கவிழும் சாத்தியம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.