கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாணவன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவில் அவருக்குக் கொரோனாத தொற்று உறுதி செய்யப்பட்டது.
குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவன் 7 நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து அறிவியல் நகர் திரும்பியிருந்தார் என்று கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்தார். அந்த மாணவனை கிளிநொச்சியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார்.