பாணந்துரை − பலேமுல்ல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்தோரை இலக்கு வைத்தே, இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துரை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.