பிரான்சில் கொரோனாவால் அதிக மரணங்களை கொண்ட மாகாணம் இது தான்! வெளியான புள்ளி விவரம்

0
446

பிரான்சில் கொரோனாவால் அதிக மரணங்கள் பதிவான மாகாணங்களில் இல் து பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது வரை அங்கு 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிரான்சில் இருக்கும் மாகாணங்களில், இல் து பிரான்ஸ் மாகாணத்திலே அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

இங்கு 12990 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 7667 பேர் Auvergne-Rhône-Alpes மாகாணத்தில் உயிரிழந்துள்ளனர்.

அதே சமயம், இல் து பிரான்சுக்குள் 6.4 சதவீத வீதத்தில் கொரோனா தொற்று வீதம் பரவி வருகிறது. மேலும் பிரித்தானியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ், பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.