பாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்! மஹிந்த சமரசிங்க குற்றச்சாட்டு!

0
1013

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக கரு ஜயசூரிய செயற்பட்டமையின் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவைப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். Mahinda Samarasinghe Statement sri lanka Tamil News

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

“வர்த்தமானி அறிவித்தலின்படி நாளைமறுதினம் பாராளுமன்றம் கூடியிருந்தாலும் கரு ஜயசூரிய தனது கட்சி சார்பாகவே செயற்பட்டிருப்பார்.

எனவே தான் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

மேலும் மஹிந்தராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் உறுப்புரிமையை ஏற்றிருந்தாலும் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார்” என கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!

பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

Tamil News Group websites