ஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை

0
1032
senior JK BJP leader brother shot dead Kishtwar Tamil News

ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். (senior JK BJP leader brother shot dead Kishtwar Tamil News)

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாஜக மாநில செயலாளராக இருந்த அனில் பரிஹார் மற்றும் அவரது சகோதரர் அஜித் ஆகிய இருவரும் நேற்றிரவு தங்களது கடையை மூடிவிட்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இதன்போது, வீட்டின் அருகில் பதுங்கியிருந்த ஆயுததாரிகள் அனில், அஜீத்தை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை உறவினர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த வைத்தியர்கள் வரும் வழியிலேயே இவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பாஜக மாநில செயலாளர் அனில் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மாநில பொது செயலாளர் அசோக் கவுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் பல ஆண்டுக்கு பின்னர் அரசியல் கட்சி பிரமுகரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இதுவென்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி

என் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி

தமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

மகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்

சபரிமலை கலவரத்தில் ஈடுபட்ட 3505 பேர் கைது

Tamil News Group websites

Tags; senior JK BJP leader brother shot dead Kishtwar Tamil News