என் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி

0
1207
my attack central government inquiry JaganMohan India Tamil News

தன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார். (my attack central government inquiry JaganMohan India Tamil News)

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவரால் கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அவருடைய தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

அவரை தாக்கிய ஸ்ரீனிவாசராவ் என்பவரை பொலிஸார் கைது செய்ததுடன், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறும்போது, அரசியல் ஆதாயத்துக்காக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய நாடகம் இதுவென்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி கருத்து தெரிவிக்கையில், நான் விமான நிலையத்தில் இருந்தபோது அந்த இளைஞர் என்னிடம் வந்து செல்பி எடுக்க வேண்டும் என்று கூறினார். நான் அதற்கு சம்மதித்தேன். அப்போது ஆயுதத்தை எடுத்து என் கழுத்தில் குத்தவந்தார்.

நான் உடனே சுதாரித்துக் கொண்டு தோள்பட்டையால் தடுத்தேன். இதனால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனை அங்கிருந்த எல்லோரும் பார்த்தார்கள். நான் எனது பாதுகாப்பு விஷயத்தை மக்களிடமே விட்டு விடுகின்றேன்.

ஆனால் நாங்களே ஏற்பாடு செய்து நாடகம் ஆடுவதாக சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறார். தாக்குதல் நடந்துமே டி.ஜி.பி. ஆர்.பி. தாகூர் அரசியல் ஆதாயத்துக்காக இந்த சம்பவம் நடந்தது என்று கூறினார். அதைத்தான் சந்திரபாபு நாயுடுவும் கூறுகிறார்.

இதில் உண்மை வெளியே வரவேண்டும் என்றால் மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். மாநில அரசின் புலனாய்வு அமைப்பு விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

அவர்கள் ஏற்கனவே இப்படித் தான் விசாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்கூட்டியே தீர்மானித்து செயல்படுகிறார்கள். இதில் நடந்த உண்மை வெளிவருவதற்கு மத்திய அரசின் விசாரணை அவசியமானதாகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இரட்டை பெண் குழந்தைகளை பெற்ற தந்தையே விற்ற அவலம்

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றிவிட்டார் ; மல்லிகார்ஜுன கார்கே

தமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

மகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்

சபரிமலை கலவரத்தில் ஈடுபட்ட 3505 பேர் கைது

Tamil News Group websites

Tags; my attack central government inquiry JaganMohan India Tamil News