தமிழகத்தில் இன்று காலை முதல் கடும் மழை

0
561
Heavy Rain lashes Chennai morning India Tamil News

வடக்கு கிழக்கு பருவமழை ஆரம்பிக்கவுள்ள நிலையில், சென்னையில் காலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது. (Heavy Rain lashes Chennai morning India Tamil News)

தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்ததை அடுத்து, வடக்கு கிழக்கு பருவமழை தொடங்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

ஆனால், பருவமழை தொடங்குவதற்கான சூழல் தென்படவில்லை என்றும் அதேசமயம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது.

அந்த வகையில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகின்றது.

மழை காரணமாக ஆங்காங்கே வீதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன சாரதிகள் அவதிப்படுகின்றனர்.

இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 1 ஆம் திகதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பிப்பதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இரட்டை பெண் குழந்தைகளை பெற்ற தந்தையே விற்ற அவலம்

மேக் இன் இந்தியா திட்டம் உலக அளவில் மாறியுள்ளது; நரேந்திர மோடி

நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றிவிட்டார் ; மல்லிகார்ஜுன கார்கே

தமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

மகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்

சபரிமலை கலவரத்தில் ஈடுபட்ட 3505 பேர் கைது

Tamil News Group websites

Tags; Heavy Rain lashes Chennai morning India Tamil News