ஜனாதிபதிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை?

0
625
Prosecution against President

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சிகளில், ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Prosecution against President

ரணில் விக்ரமசிங்கவை முறையற்ற வகையில் பதவிநீக்கம் செய்து, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை ஐதேகவுக்கு கடும், சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக நிறுத்தி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ கூறியுள்ளார்.

அவர் நாட்டு மக்களுக்கும், ஐதேகவுக்கும் துரோகம் இழைத்து விட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.

மங்கள சமரவீரவும் இதே கருத்தை வெளியிட்டதுடன், ஜனாதிபதிக்கு எதிராக குற்றவிசாரணைப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவது பற்றி ஆலோசித்து வருவதாக கூறியிருந்தார்.

அதேவேளை, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவிசாரணைப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவது தொடர்பாக நேற்று ஆலோசனைகளை நடத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, பிரதமரிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கான யோசனைகள் கிடைத்துள்ளன. இப்போது நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்றே கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

tags :- Prosecution against President

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

மகிந்தவின் மீள் வருகை குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட கருத்து

கொலை சதியில் பொன்சேகாவுக்கு தொடர்பு! மைத்திரி தெரிவித்த உண்மை!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites