அமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது

0
660
US leaders postal bomber man arrested

அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பொதிகள் உளவுப்படை பொலிஸார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும். US leaders postal bomber man arrested

அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய ஜனாதிபதியான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பொதிகளை இடைமறித்து அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றினர்.

இவர்கள் மட்டுமின்றி, ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஹாலிவுட் நடிகருக்கும் இதுபோன்ற தபால்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிரமாக தேடுதல் வேட்டையை துவங்கிய பொலிஸார், 56 வயதான சீசர் சாயோக் என்பவரை கைது செய்துள்ளனர்.

வெடிகுண்டு பொதி ஒன்றில் இருந்த இவரது கைரேகையை வைத்து இவரை கைது செய்துள்ளதாக எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். இவர் மீது வெடிமருந்து கடத்தல், சட்டவிரோதமாக வெடிமருந்துகளை தபாலில் அனுப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் இவருக்கு 58 ஆண்டுகள் சிறைவாசம் தண்டனையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவரை கைது செய்ததன்மூலம் இந்த விவகாரம் முடியவில்லை எனவும், தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

அவரை விசாரணைக்காக புலனாய்வு துறையினர் புளோரிடாவுக்கு அழைத்து சென்றிருப்பதாக அமெரிக்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

tags :- US leaders postal bomber man arrested

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்