எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி முதல் திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதிக்கவுள்ளது. (plastic ban tirupati temple November 1st India Tamil News)
திருப்பதியில் கடந்த 2 ஆம் திகதி காந்தி ஜெயந்தி நாள் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு நகராட்சி தடை விதித்ததுடன், 50 மைக்ரானுக்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள், 2 லீட்டருக்கும் குறைவான குடிநீர் போத்தல்கள், தேனீர் அருந்த பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பாத்திரங்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடைவிதிக்க கோரி திருப்பதி நகராட்சி அதிகாரிகள் தேவஸ்தான அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 1 ஆம் திகதி முதல் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதிக்கவுள்ளது.
இதுகுறித்து திருமலையில் உள்ள உணவகம் மற்றும் கடை உரிமையாளர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள் கலந்துரையாடினர்.
இதில் திருமலையில் கற்கண்டு, பேரீச்சம்பழம், கடவுள் படங்கள், பைகள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்கள் சுற்றி விற்பனை செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும்.
திருமலையில் உள்ள உணவகங்களிலும் தேநீர், கோப்பி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என்று அதிகாரிகள் அவர்களிடையே அறிவுறுத்தினர். திருமலைக்கு வரும் பக்தர்களும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுற்றுசூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் லட்டுகளை போட்டுத்தரும் உரைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டு உரைகளை மாத்திரம் பயன்படுத்த தேவஸ்தானம் நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளனர்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- செம்மரம் கடத்த முயற்சித்த தமிழக இளைஞர்கள் கைது; 14 செம்மரங்கள் பறிமுதல்
- டெல்லியில் 8 வயது மதரசா மாணவன் பலி; அப்பகுதியில் பெரும் பரபரப்பு
- இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை வாங்க இந்தியா திட்டம்
- உத்தரகாண்ட் பிரதேசத்தில் 827 ஆபாச இணையத் தளங்களுக்கு தடை
- அரசியலில் பின்னடைவு கிடையாது ; டிடிவி தினகரன்
- விமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கத்திக்குத்து தாக்குதல்
- டெல்லி அமைச்சரின் வீட்டில் சோதனை; 37 இலட்சம் ரூபாய் பறிமுதல்
- ஜம்மு – காஷ்மீரில் பயங்கர துப்பாக்கிச் சண்டை
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; plastic ban tirupati temple November 1st India Tamil News