ஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்

0
573
Google removes 48 employees sexual harassment

கூகுள் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட 48 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியிருப்பதாக அந்நிறுவன தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். Google removes 48 employees sexual harassment

தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை சந்தித்த போதிலும், பணிநீக்கத்துக்கு பின்னர் கூகுள் நிறுவனத்தில் இருந்து 90 மில்லியன் டொலர்களை இறுதி கொடுப்பனவாக அண்ட்ராய்ட் இயங்குதளத்தை உருவாக்கியவரான அன்டி ரூபின் பெற்றதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரைக்கு பதிலுரையாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுந்தர்பிச்சை கடந்த 2 ஆண்டுகளில் 13 மூத்த அதிகாரிகள் உள்பட 48 பேர் பாலியல் புகார்களால் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், அவர்களில் யாருக்குமே வேலையிலிருந்து செல்லும் போது எந்த பணப்பலன்களும் வழங்கப்படவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார். கூகுள் நிறுவனத்தில் பணியிடப் பாதுகாப்பே முக்கியம் எனவும், பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்கள் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

tags ;- Google removes 48 employees sexual harassment

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்