முகநூல் பயனாளர்களின் தகவல் திருட்டு – முகநூல் நிறுவனத்துக்கு 12 கோடி ரூபாய் அபராதம் !

0
615
facebook users’ information theft fined Rs 12 crore

வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, முகநூல் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 12 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. facebook users’ information theft fined Rs 12 crore

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக முகநூல் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் முகநூல் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முகநூல் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும், இது தொடர்பாக இங்கிலாந்து தகவல் ஆணையம் அளித்துள்ள தீர்ப்பில், வாடிக்கையாளர்களின் தகவலை அவர்களுடைய அனுமதியின்றி பயன்படுத்திய குற்றச்சாட்டில் முகநூல் நிறுவனத்திற்கு இங்கிலாந்து தகவல் பயன்பாட்டுச் சட்ட விதிகளின் படி அதிகபட்ச அளவாக 12 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

முகநூல் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு செயல்களின் மூலமாக சேகரிக்கப்படும் தகவல்களானது, பயனாளர்களின் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தபட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து முகநூல் நிறுவனம் தவறிழைத்துள்ளது.

இந்தநிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் ஏற்படத்திய பிறகும் 2018ஆம் ஆண்டுவரை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் மூல நிறுவனமான எஸ்.சி.எல் நிறுவனம் முகநூல் தளத்திலிருந்து நீக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது.

tags :- facebook users’ information theft fined Rs 12 crore

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்