காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்; சிபிஐ அலுவலகங்கள் முன்னால் பொலிஸ் பாதுகாப்பு

0
600
deployed outside CBI offices ahead Security forces India Tamil News

சிபிஐ இயக்குநர் மீதான நடவடிக்கையை கண்டித்து, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்த அறிவித்திருப்பதால், சிபிஐ அலுவலகங்கள் முன்னால் அதிகளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். (deployed outside CBI offices ahead Security forces India Tamil News)

சிபிஐ அமைப்பில் இலஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதனை அடுத்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவை நீக்கிய விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது.

ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்னால் போராட்டம் நடத்தப்படும் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அனைத்து சிபிஐ அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் தயாராகியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளதால், சிபிஐ அலுவலகங்கள் முன்பு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் இந்த போராட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், டெல்லியில் ராகுல் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; deployed outside CBI offices ahead Security forces India Tamil News