முன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்!

0
582
14 people injured pre-school children

மத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். 14 people injured pre-school children

சோங்கிங் நகர பானன் மாவட்ட பொலிஸார் கூறும்போது, காலை 9.30 மணியளவில் சிறார்கள் காலை நேர பயிற்சிகளை நிறைவு செய்து விட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. பள்ளியின் பாதுகாவலர் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து அந்த 39 வயது பெண்ணை பிடித்து உள்ளனர். அவர்களையும் தாக்கி உள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட குழந்தைகள் அனைவரும் அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவம் நடந்த பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்திற்கான காரணம் தெரியாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

tags ;- 14 people injured pre-school children

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்