தமிழ் நாடு தேனி மாவட்டத்தில் ஆதரவற்ற தொழிலாளியின் சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் ஏற்பாடு செய்யாமல் தள்ளுவண்டியில் இறுதி ஊர்வலமாக எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (Theni worker final journey trolley Tamil News)
தேனி வாரச்சந்தை வளாகத்தில் நேற்றைய தினம் முதியவர் ஒருவர் சடலமாக இருந்த நிலையில் தகவலறிந்த தேனி மாவட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில் உயிரிழந்தவர் 60 வயதுடைய சிவனாண்டி என்றும் இவர் பல ஆண்டுகளாக சந்தையில் தள்ளுவண்டியில் பொருட்களை ஏற்றிச் செல்லும் தொழிலாளியாக வேலை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.
ஆதரவற்ற குறித்த வயோதிபர் தங்குவதற்கு வீடு இன்றி வாரச் சந்தையிலேயே தங்கியுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே அவருடைய சடலத்தை கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் வசதி எதுவும் செய்யப்படவில்லை.
ஆதரவற்ற நிலையில் இருந்த சடலத்தை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 2 பேர் ஒரு தள்ளுவண்டியில் வைத்து தேனி பள்ளிவாசல் தெருவில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்ற நிலையில், அவர்களுடன் பொலிஸாரும் சென்றனர்.
இவர்கள் தேனி கம்பம் பிரதான வீதியில் நேரு சிலை சிக்னல் வழியாக சென்றபோது, அவருடைய முகத்தை கூட மூடாமல் இருந்தனர்.
இதனைப் பார்த்த பொதுமக்களும், வாகனங்களில் சென்றவர்களும் வேதனை அடைந்தனர். பின்னர் பள்ளிவாசல் தெருவில் உள்ள மயானத்தில் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதியில் தள்ளுவண்டியை நிறுத்தி வைத்தனர். நீண்டநேரம் கழித்து அவருடைய உடலை அடக்கம் செய்தனர்.
ஆதரவற்ற நிலையில் இருந்த சிவனாண்டிக்கு, மரணத்துக்கு பின்னும் அம்புலன்ஸ் கூட ஏற்பாடு செய்து அடக்கம் செய்யாமல், தள்ளுவண்டியில் இறுதி ஊர்வலம் நடத்தியது மனித நேயம் மரித்துப் போய்விட்டதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- 100 வயது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 வயது காமுகன்
- சபரிமலையில் இன்று நடை அடைப்பு; 6 பெண்கள் தடுத்து நிறுத்தம்
- சபரிமலை விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மீதான வழக்கு விசாரணை
- பட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை இல்லை; உச்ச நீதிமன்றம்
- வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தமிழக அரச பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி முற்பணம்
- இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
- ஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Theni worker final journey trolley Tamil News