தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னை தமது பொம்மையாக நடத்தவே விரும்பியது என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பலத்த குற்றசாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். North CM Vigneswaran Speech Sri Lanka Tamil News
நேற்று யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவை விசேட ஒன்றுகூடலில் தமிழ் மக்கள் கூட்டணி என்னும் புதிய அரசியல் கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் இது தொடர்பில் ஆற்றிய உரையிலிருந்து,
“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராகவே கடந்த தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால் என்னை ஒரு பொம்மையாக வைத்து அரசியலை நடத்துவதற்கு அதன் தலைவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
அதற்கு என்னால் இடமளிக்கமுடியவில்லை. எனக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைக்கும் இடையே கடந்த 4 வருடங்களில் இடைவெளி பெரிதும் அதிகரித்துள்ளது.
இது நான் பெரிது நீ பெரிது என்ற மனப்பான்மை காரணமானதாகவோ அல்லது தலைமைத்துவப்போட்டி காரணமாகவோ ஏற்படவில்லை. மாறாக, எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் கோட்பாடு ரீதியாகவும் அணுகுமுறை ரீதியாகவும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இந்த வேறுபாடுகள் ஏற்பட்டன” என கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!
இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!