பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஞாயிறு தோறும், மதுரை முத்து நடித்து வழங்கும் காமெடி நிகழ்ச்சி, ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மதுரை முத்து பேசும் ஆபாச வசனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, தமிழக பெண்களிடையே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.(Mathurai muththu abused Speech program )
பெண்களை அவமதிக்கும், பல காட்சிகள், வசனங்கள் போன்றவை, இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இதே போல, இந்தக் காமெடி நிகழ்ச்சியை, இதற்கு முன்பாக, வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்து ஒளிபரப்பானது.
அப்போது, அந்த நகைச்சுவை நாடகங்களில், இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் நிறைந்திருந்தது. தற்போது, மதுரை முத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், காமெடி என்ற பெயரில், ஆபாசமான வசனங்களை மதுரை முத்து அதிகம் பேசி வருகிறார், என்று பல பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டத் துவங்கி உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில், காமெடி என்ற பெயரில், தொடர்ந்து, இப்படி ஆபாசம் அதிகரித்தால், இதனை எதிர்த்து போராடவும், அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.