தமிழகத்தில் நெடுஞ்சாலை அமைப்பதில் எந்தவித முறைகேடும் நடக்காததால் மேன்முறையீடு செய்துள்ளதாக திருச்சி விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். (Tamil Nadu CM Edappadi palaniswami says appealed)
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டமை ஏற்புடையதல்ல என்றும், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக இன்று நண்பகல் திருச்சி விமான நிலையத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் வீதி அமைப்பதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் நியாயமான விசாரணை நடத்தவே சி.பி.ஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலை டெண்டர் வழக்கில் உயர்நீதிமன்றம் என் மீது எந்த குற்றமும் சொல்லவில்லை. முதலமைச்சர் என்ற உயர்ந்த பதவியில் உள்ளதால் மேல்முறையீடு செய்துள்ளேன்.
கொள்ளிடத்தில் கதவணை கட்ட விரைவில் திட்ட அறிக்கை தயார் செய்து டெண்டர் விடப்படும். காவிரியில் உபரி நீரை தடுத்து நிறுத்த ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி அறிக்கையளிப்பார்.
அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை கூடும் மக்கள் கூட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- இந்து மதத்தை புறம்தள்ளிவிட்டு எவரும் அரசியல் நடத்த முடியாது
- சபரிமலையில் இன்று நடை அடைப்பு; 6 பெண்கள் தடுத்து நிறுத்தம்
- கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் தற்கொலை செய்ய வேண்டும்
- சபரிமலைக்குள் செல்ல முயற்சித்த ரஹானா பாத்திமா வீட்டில் தாக்குதல்
- தமிழகத்தில் ஒரே நாளில் பன்றிக் காய்ச்சலால் 04 பேர் பலி
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பத் தாமதம்
- இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது; மு.க. ஸ்டாலின்
- ஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Tamil Nadu CM Edappadi palaniswami says appealed