இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

0
682
Number crorepatis risen 60 per cent

இந்தியாவில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்துக்கு கணக்கு சமர்பித்து, வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. (Number crorepatis risen 60 per cent)

மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் இன்று வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையின்படி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்ததாக வரி செலுத்தியவர்கள் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 1.40 இலட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வு விகிதாச்சாரம் நிதியாண்டு 2014 – 15 ஆம் ஆண்டு 88 ஆயிரத்து 649 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்துக்கு கணக்கு சமர்ப்பித்திருந்தனர். இந்த எண்ணிக்கை நிதியாண்டு 2017-18 இல் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளது.

இதே காலகட்டத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்ததாக வரி கட்டியவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 416 இல் இருந்து 81 ஆயிரத்து 344 ஆக (68 சதவீதம்) உயர்ந்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக அரசின் சட்டரீதியான, தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த உயர்வுக்கு காரணம் என மத்திய நேரடி வரி விதிப்பு வாரிய தலைவர் சுஷில் சந்திரா குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று கடந்த 4 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையும் 3.79 கோடியில் இருந்து 6.85 கோடியாக (80 சதவீதம்) உயர்ந்துள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Number crorepatis risen 60 per cent