நைஜீரியா நாட்டின் வட பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தில் கசுவான் மாகாணி நகரில் உள்ள சந்தையில் இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த சுமை தூக்குகிறவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. Nigeria 55 people killed clashes between two religions
இந்த பிரச்சினை தொடர்பாக, இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டதில் 55 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த மோதல் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நகரத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மத மோதல்கள் குறித்து அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “எந்த மதமும் அல்லது கலாசாரமும் வன்முறையை ஆதரிப்பது இல்லை. சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அமைதியும், நல்லிணக்கமும் நிலவுவது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “வெவ்வேறு மத நம்பிக்கை உள்ள மக்களிடம் நல்லிணக்கம் இல்லாதவரையில், நமது அன்றாட பணிகளை நாம் செய்து முடிப்பது சாத்தியம் இல்லாமல் போய் விடும். இந்த பிரச்சினையில், மத தலைவர்கள் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும்; வேற்றுமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
tags :- Nigeria 55 people killed clashes between two religions
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து 2 தொழிலாளர்கள் பலி – தொடரும் மீட்பு பணி
- பாகிஸ்தானில் வீதி விபத்து: 19 பேர் பலி
- தென் ஆப்பிரிக்காவில் வீதி விபத்து – 27 பேர் பலி
- பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரசு
- 10 ஆண்டுகள் தந்தையின் உடலுடன் வாழ்ந்த மகன்
- பத்திரிகையாளர் கொலை – சவுதி அரேபியாவை எச்சரிக்கும் டிரம்ப்
- உலக அளவில் மிகவும் பாதுகாப்பான நாடாக விளங்கும் ஓமான்
- முகநூல் தலைவர் பதவியில் இருந்து மார்க்கை நீக்க திட்டம்
எமது ஏனைய தளங்கள்