உத்தரப் பிரதேசத்தில் விபத்தில் ; நேபாளத்தை சேர்ந்த 04 பேர் பலி

0
566
Four Nepalese nationals killed accident

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். (Four Nepalese nationals killed accident)

நேபாளத்தின் சிந்தூலி மாவட்டத்தில் இருந்து வாரணாசிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுற்றுலாக்கு சென்றிருந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ராஜதேபூர் கிராமம் வழியே கார் சென்றுகொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று குறித்த காரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Four Nepalese nationals killed accident