நடிகை ஸ்ருதிஹாசன் மைக்கேல் கோர்சலுடன் ஒன்றாக ஊர் சுற்றி வருகிறார். அவர் இந்தியா வந்தவுடன் தந்தையான கமலஹாசனிற்கும், தாய் சரிகாவிற்கும் மைக்கேலை அறிமுகப்படுத்தி வைத்தார். Actress Sruthi haasan love gossip
அத்துடன் புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். இதனால் விரைவில் கல்யாண அறிவிப்பை வெளியிடுவார் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் மைக்கேல் என் நண்பர். நான் இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன், திருமணம் நிச்சயமானால் உடனே அறிவிப்பேன் என ஸ்ருதி தெரிவித்தார்.
அதன் பிறகு தற்போது இன்ஸ்டாகிராமில் புதிய போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நாளுமே சூப்பர் அனுபவம் தான். சிறந்த நண்பன் பார்ட்னர் ஆனால் எப்படி இருக்கும் என்று காட்டிவிட்டாய், உன்னுடன் ஒன்றாக நடந்து பேசி, சிரித்துக்கொண்டே இருக்கிறான் என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் தந்தையை போல லிவிங் டுகெதராய் வாழாமல் விரைவில் கல்யாண சாப்பாடு போடுங்கள் என கலாய்த்துள்ளனர்.