இன்று இந்திய தலைவர்களுடன் ரணில் தனித்தனியாக முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு

0
657
Ranil talking about important issues Indian leaders

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்திய அரசின் தலைவர்களுடன் தனித்தனியாக முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளார். Ranil talking about important issues Indian leaders

இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை ரணில் சந்திக்கவுள்ளார்.

இந்தியப் பிரதமருடனான சந்திப்பு இன்று பிற்பகல் ஹைதராபாத் ஹவுசில் இடம்பெறும்.

இதன்போது, இரண்டு நாடுகளின் பிரதமர்களும், வடக்கில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும், வீடமைப்புத் திட்டங்களின் நிலை குறித்து மீளாய்வு செய்யப்படும் என்றும், நல்லிணக்க செயல்முறைகள் மற்றும் தமிழ்ப் பகுதிக்கான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட தமிழர் விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இலங்கையில் சீனாவின் பொருளாதாரத் தலையீடுகள் அதிகரித்து வரும் பின்னணியில், இந்திய – இலங்கை உறவுகளின் முழுவரம்பு குறித்து கலந்துரையாடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

tags :- Ranil talking about important issues Indian leaders

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

போர்க்குற்றச் சந்தேக நபராக இனம்கண்ட இலங்கை கட்டளைத் தளபதியை மீளழைக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரிக்கை!

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

Tamil News Live

Tamil News Group websites