பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரசு

0
410
Saudi government admitted journalist Jamal Kasoki died

சவுதி அரேபியா நாட்டின் பத்திரிகையாளர் 59 வயது ஜமால் கசோக்கி என்பவர் கடந்த 2-ம் தேதி மாயமான நிலையில் இஸ்தான்புல் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் நடந்த மோதலின் பின் உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சவுதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. Saudi government admitted journalist Jamal Kasoki died

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி இஸ்தான்புல் தூதரக அலுவலகத்துக்குள் சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி பொலிஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில் ஜமால் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

மேலும் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதற்கு சவுதி அரேபியா அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

tags :- Saudi government admitted journalist Jamal Kasoki died

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்