“வைர முத்து ஒன்றும் துறவி இல்லையே ” பிரபல தமிழ் பாடகர் மருமகள் கருத்து

0
563
MeToo Controversy malasiaya vasudevan daughter inlaw Hayma Malini

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து மீ டூ #MeToo என்ற ஹேஷ்டேகின் கீழ் பதிவிட்டு வருகிறார்கள்.
உலக அளவில் இது பிரபலமாகி வருகிறது. மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் இந்த சர்ச்சையில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தார்.(MeToo Controversy malasiaya vasudevan daughter inlaw Hayma Malini )

தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் கூறியிருந்தார். அவருக்கு ஆதரவாக மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகளான ஹேமமாலினி தனது பேஸ்புக் பக்கத்தில் சின்மயிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

அதில்,தமிழ்த் திரையுலகம் ஏன் சின்மயிக்கு ஆதரவாக இல்லை என்பது எனக்குப் புரியவில்லை. வைரமுத்து ஒன்றும் துறவி இல்லை என்பது தமிழ் திரையுலகினருக்கு தெரியும் என்பது உறுதி. சின்மயி ஏன் இதை பத்து வருடங்களுக்கு முன் சொல்லவில்லை என்று ஏன் கேட்க வேண்டும்.

இப்போது அவர் புகார் சொல்லியுள்ளார், இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். நாம் ஏன் வைரமுத்துவை கேள்வி கேட்பதில்லை? சமூகம் ஏன் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவரைக் கேள்வி கேட்கிறது? என்ன ஒரு ஒருதலைப்பட்சமான துறை இது.

நான் சன் மியூசிக் சேனலில் இருந்தபோது, வைரமுத்து அங்கு வேலை செய்த ஒரு இளம் தொகுப்பாளரைத் தொடர்பு கொள்ள முயன்றதை அறிவேன். அவரைப் பற்றி பத்து வருடங்களுக்கு மேலாக பல தளங்களில் பேசியிருக்கிறேன். குரலற்றவர்களின் குரலாக ஒலித்த சின்மயிக்கு தலைவணங்குகிறேன். இந்தத் துறை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது’ இவ்வாறு கூறினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்