போராட்டக்காரர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் சபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களும் இன்று சன்னிதானத்தை நெருங்கிய நிலையில், அவர்களை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டது. (Kerala government ordered return two women Tamil News)
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கேரளாவில் கடும் போராட்டம் வலுப்பெற்று வருகின்றது.
நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில், அண்மையில் சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை போராட்டம் தீவிரமடைந்தது.
தீர்ப்பை சுட்டிக்காட்டி குறிப்பிட்ட வயது பெண்களும் கோவிலுக்கு செல்வதற்கு முயற்சித்ததனால் கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து சபரிமலைக்குச் சென்றனர்.
பம்பையில் இருந்து நடந்து சென்ற அவர்களை சுற்றி பாதுகாப்பு கவசங்களுடன் சுமார் 200 பொலிஸார் பாதுகாப்புக்குச் சென்றனர்.
பொலிஸ் பாதுகாப்புடன் சென்ற பெண்கள் இருவரும் இன்று 9 மணியளவில் சன்னிதானத்தை நெருங்கிய போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
சரண கோஷம் எழுப்பிய அவர்கள், பெண்களை உள்ளே செல்ல அனுமதிக்கக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தினர்.
ஆனால், அவர்களின் முழக்கங்களை காதில் வாங்கிக் கொள்ளாத பொலிஸார், தொடர்ந்து அந்த பெண்களை சன்னிதானம் நோக்கி அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்தும் சன்னிதானம் அருகேயுள்ள நடைபந்தலில் ஐயப்ப பக்தர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெண்களை உள்ளே செல்ல ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், தங்கள் பாரம்பரிய நடைமுறைகளை மாற்றக்கூடாது என பக்தர்கள் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து முன்னேறிச் சென்றால் போராட்டமும் தீவிரமடையும் சூழல் இருந்ததையடுத்து, சன்னிதானத்தை நெருங்கிய இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்பும்படி கேரள அரசு உத்தரவிட்டது.
கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்த நிலையில, குறித்த இரு பெண்களையும் பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு; தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு
- உளுந்தூர்பேட்டையில் பஸ்ஸூம் லொறியும் விபத்து; 04 பேர் பலி; பலர் கவலைக்கிடம்
- ஜம்மு காஷ்மீரில் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை
- தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- சபரிமலையில் தொடரும் பதற்றம் ; நீதிமன்றில் பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனுத்தாக்கல்
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பத் தாமதம்
- இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது; மு.க. ஸ்டாலின்
- ஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Kerala government ordered return two women Tamil News