அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி, அவரது மனைவி மெர்க்கல் ஆகியோர் பல இனிமையான அனுபவங்களை சந்தித்து வரும் நிலையில், தன்னை எட்டு வயது முதல் காதலிப்பதாகக் தெரிவித்த ஒரு இளம்பெண்ணுக்கு ஹரி ஒரு இன்ப அதிர்ச்சியை பரிசாக அளித்துள்ளார். Prince Hari gift royal fate young girl fell love her
உலகில் ஏராளமானோர் இளவரசர் ஹரியை ஒரு தடவையாவது பார்த்து விட முடியாதா என காத்திருக்க, பல்கலைக்கழக மாணவியான India Brownம் (19) தனது கையில், காலை 4 மணி முதலே உங்களைக் காண காத்திருக்கிறேன், எட்டு வயது முதலே உங்களைக் காதலிக்கிறேன் என்று எழுதப்பட்ட அட்டையுடன் காத்திருந்தார்.
பல்கலை மாணவி India Brown ஆசைப்பட்டது போலவே ஹரியின் கண்களில் அவர் பட, அவரிடம் சென்றார் ஹரி. அவரிடம் உங்களை ஒரு முறை அணைத்துக் கொள்ளட்டுமா என்று India Brown கேட்க, ஹரியும் அவளை அணைத்துக் கொண்டார்.
தனது கோரிக்கைக்கு பிரித்தானிய இளவரசர் ஏற்றுக்கொண்ட அதிர்ச்சியில் ஓவெனக் கதறி அழ ஆரம்பித்து விட்டார் India Brown. அவரை ஆறுதல் அளித்துவிட்டு, இளவரசர் ஹரி அங்கிருந்த மற்றவர்களுடனும் கைகுலுக்கி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
India Brown னிடம் அவர் என்ன கூறினார் என மற்றவர்கள் கேட்க, உன்னால் எனக்கு பிரச்சினை வரப்போகிறது என்று ஹரி கூறியதாக தெரிவித்தார்.
பிரித்தானிய இளவரசர் ஹரி ராஜ விதி முறைகளை மீறியல்லவா அவர் India Brownஐ அணைத்திருக்கிறார்.
tags :- Prince Hari gift royal fate young girl fell love her
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- சகோதரனின் மரணம் மகிழ்ச்சி அளிக்கிறது: காரணத்தை வெளியிட்ட பிரித்தானிய பெண்
- உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஹரியும் மெர்க்கலும் செய்த காரியம்
- உடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கு ஐரோப்பிய ஆணைக்குழு தயார்
- இங்கிலாந்து இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
- இங்கிலாந்தில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
- இளவரசி யூஜீனி காதலனான ஜெக் ப்ரூக்ஸ்பேங்க்கை கரம்பிடித்தார்
- பிரெக்சிற் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 50 வீத வாய்ப்பு: டொனி பிளேயர்