உகாண்டா நாட்டின் தெற்கில் அமைந்துள்ள மலைகள் சூழ்ந்த பகுதியான மவுண்ட் எல்கோன் மாகாணத்தில் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் படுடா மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. Ugandan heavy rainfall 34 killed
இதில், படுடா மாவட்டத்தின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள 3 கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மலையில் இருந்து மண் சரிந்ததை அடுத்து பெரும்பாலன வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 31 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும் மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 3 கிராமத்தை சேர்ந்த பலரை காணவில்லை என்பதால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இடிபாடுகளுக்குள் அவர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இதுபற்றி பேரிடர் மேலாண்மை கழக உயரதிகாரி ஓவர் கூறும்பொழுது, ஆறு ஒன்று கரையை உடைத்து கொண்டு பாய்ந்ததில் பாலம் ஒன்று மூழ்கி போனது. அருகிலுள்ள பகுதிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. சிலர் காணாமல் போயுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என தெரிவித்துள்ளார்.
இதுவரை 31 உடல்கள் மீட்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
tags ;- Ugandan heavy rainfall 34 killed
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- 48 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளில் இணைய இணைப்பு முடங்கும் வாய்ப்பு
- சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரஷ்ய விண்வெளி வீரர்கள்
- மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் பேரழிவை சந்தித்த அமெரிக்கா
- இந்தோனேசியாவில் இன்று மீண்டும் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தினை மூட முடிவு
- ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே இராஜினாமா
- ஃபுளோரிடா நோக்கி நகரும் மைக்கல் சூறாவளி!
எமது ஏனைய தளங்கள்