நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு – திராய்மடு சவுக்கடிப் பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 12 பேரை இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். Batticaloa Police Arrested 12 Sri Lanka Tamil News
குறித்த பிரதேசத்தில் இருந்து பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை இரவு சுற்றிவளைத்து சோதனையின்போது புதையல் தோண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
மட்டக்களப்பு , நீர்கொழும்பு, சிலாபம், அலாவத்தை, அக்குறனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 6 தமிழர்களும் 6 இஸ்லாமியர்களுமாக 12 பேரை கைது செய்ததுடன் ஸ்கானர் மற்றும் புதையல் தோண்டலுக்குப் பயன்படுத்திய பொருட்களையும் மீட்டுள்ளனர்
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!
இடைக்கால அரசுக்கு மக்கள் ஆணை கிடையாது! அமைச்சர் மனோ கருத்து!
யாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்!
ஜனாதிபதி வேட்பாளர் பசில் தான்! கோத்தாபாய உறுதி!
மைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! சஜித் பிரேமதாச!