மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் பேரழிவை சந்தித்த அமெரிக்கா

0
372
US suffered catastrophe Michael Hurricane

அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் புயல் மையம் கொண்டு இருந்தது. அந்த புயலுக்கு ‘மைக்கேல்’ என்று பெயர் சூட்டி இருந்தனர். US suffered catastrophe Michael Hurricane

அது, புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வந்தது. நேற்று நள்ளிரவு அமெரிக்காவை புயல் தாக்கியது.

முதலில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களையும் தாக்கியது. மணிக்கு 200-ல் இருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது.

அத்துடன் பலத்த மழையும் பெய்தது. சூறாவளியால் கடலிலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. வழக்கத்தை விட 12 அடி உயரத்துக்கு இராட்ச அலைகள் எழுந்து வந்தன. இதனால் பல இடங்களில் நிலப்பரப்புக்குள் தண்ணீர் புகுந்தது.

மழைநீர் மற்றும் கடல் நீரால் புளோரிடா நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.

லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் வீதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மரத்தினால் கட்டப்பட்ட வீடுகள் அதிகமாக உள்ளன. சூறை காற்றினால் இவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன. பல வீடுகளை சூறாவளி காற்று முற்றிலும் இழுத்து சென்று விட்டது.

கடலில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் கொந்தளிப்பில் சிக்கி கரைக்கு இழுத்து வரப்பட்டன. அவற்றில் பல படகுகள் உடைந்து சேதம் அடைந்து ஆங்காங்கே கடலில் மிதக்கின்றன.

புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இதேவேளை, புளோரிடா மாநிலம் முழுவதிற்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புளோரிடாவை கால் நூற்றாண்டுக்கு பின்னர் தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாகவும், அமெரிக்க பிரதான நிலப்பரப்பை தாக்கிய மூன்றாவது மிக சக்திவாய்ந்த சூறாவளியாகவும் இந்த மைக்கேல் சூறாவளி விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

tags :- US suffered catastrophe Michael Hurricane

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்