பிரெக்சிற் தொடர்பாக அமைச்சர்களுடனான முக்கிய பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பிரதமர் தெரேசா மே

0
414
Prime Minister Teresa May preparing negotiations ministers Brezhsky

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான பிரெக்சிற் பேச்சுவார்த்தை தொடர்பாக பிரதமர் தெரேசா மே முக்கிய அமைச்சர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார். Prime Minister Teresa May preparing negotiations ministers Brezhsky

பிரெக்சிற் தொடர்பான அரசாங்கத்தின் மீதான அழுத்தங்கள் வலுப்பெற்றுள்ள நிலையிலேயே பிரெக்சிற் நெருக்கடிகள் குறித்து விளக்கமளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இறுதி பிரெக்சிற் ஒப்பந்தம் திருப்தியடையக் கூடிய வகையில் அமையாத பட்சத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பிரஸ்சல்ஸ் உச்சிமாநாட்டில் அரசாங்கத்திற்கான ஆதரவை மீளப்பெறுவதாக ஜனநாயக ஒன்றியக் கட்சி எச்சரித்துள்ளது.

இதேவேளை, பிரதமர் மே-யின் பிரெக்சிற்றுக்கு பின்னரான வர்த்தக திட்டம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது. அதுமாத்திரமன்றி, பிரதமர் சொந்த கொன்சவேற்றிவ் கட்சிக்குள்ளிருந்தும் எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

இவ்வாறாக பல்வேறு தரப்பிலிருந்தும் பிரதமர் மே-க்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே அமைச்சர்களுடனான முக்கிய பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

tags :- Prime Minister Teresa May preparing negotiations ministers Brezhsky

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************