மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று டைம்ஸ்நவ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Times now survey BJP ahead Madhya Pradesh Chhattisgarh)
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி இடம்பெற்று வருவதுடன், அந்த மாநிலத்தில் எதிர்வரும் மாதம் 28 ஆம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
மத்திய பிரதேசத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று அண்மையில் சிவோட்டர் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் இணைந்து வார்ரூம் ஸ்ட்ரடெஜிஸ் நிறுவனமும் இணைந்து ஒரு கருத்து கணிப்பை நடத்தியதுடன், அந்த முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அந்த கருத்து கணிப்பில் மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியை மீண்டும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 142 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் 77 தொகுதியிலும், மற்ற கட்சிகள் 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க 166 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தடவை 24 இடங்கள் குறைந்துவிடும் என்று சர்வேயில் தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 20 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தேர்தலில் பா.ஜ.க வுக்கு 44 சதவீதம் பேர் வாக்களிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 35 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
முதல் அமைச்சராக யார் வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 61 சதவீதம் பேர் சிவராஜ் சிங்சவுகானை தெரிவு செய்துள்ளனர். காங்கிரசை சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை 17 சதவீதம், திக்விஜய்சிங்கை 25 சதவீதம், கமல்நாத்தை 6 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.
மத்திய பிரதேசம் போல சத்தீஸ்கரிலும் ராமன்சிங் தலைமையிலான பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தீர்மானம்
- மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதம் ; ஐ.எம்.எப் அறிக்கை
- ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக மீண்டும் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
- நக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்
- தமிழகத்திற்கு தேவையான திட்டங்களுக்கு நிதியளிக்க பிரதமரிடம் கோரிக்கை
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்; முதலமைச்சர் வசுந்தரா ராஜே
- பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல்; மு.க.ஸ்டாலின்
- சவுதியிலுள்ள சர்வதேச இந்திய பாடசாலையை மூட வேண்டாம்; சுஷ்மா சுவராஜிடம் கோரிக்கை
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Times now survey BJP ahead Madhya Pradesh Chhattisgarh