ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெறவுள்ளது. (Supreme Court Hear Petition Against Rafale Deal)
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, ரபேல் ஒப்பந்தத்துக்கு தடைவிதிக்க வலியுறுத்தி எம்.எல்.சர்மா என்ற சட்டத்தரணி உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நாளை புதன்கிழமை விசாரிக்கப்படும் நிலையில், வினீத் தண்டா என்ற சட்டத்தரணி புதிதாக உச்ச நீதிமன்றம் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் மற்றும் இந்த விமானங்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் தற்போது வாங்கும் விலைக்கு இடையிலான ஒப்பீடு போன்றவற்றை வெளியிட மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தத்தில் இந்திய பங்குதாரர் நிறுவனமாக ரிலையன்ஸ் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணங்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்ததை விசாரணைக்கு ஏற்பதாக கூறிய நீதிபதிகள், இதன் மீது 10 ஆம் திகதி விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தீர்மானம்
- மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதம் ; ஐ.எம்.எப் அறிக்கை
- பீகார் பாஜக தலைவரின் மகன் கத்தியால் குத்தி கொலை
- டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நேரில் முன்னிலை; கைதுசெய்ய தடை நீடிப்பு
- தமிழகத்திற்கு தேவையான திட்டங்களுக்கு நிதியளிக்க பிரதமரிடம் கோரிக்கை
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்; முதலமைச்சர் வசுந்தரா ராஜே
- பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல்; மு.க.ஸ்டாலின்
- சவுதியிலுள்ள சர்வதேச இந்திய பாடசாலையை மூட வேண்டாம்; சுஷ்மா சுவராஜிடம் கோரிக்கை
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Supreme Court Hear Petition Against Rafale Deal