பீகார் பாஜக தலைவரின் மகன் கத்தியால் குத்தி கொலை

0
583
son local BJP leader Gangotri Prasad stabbed

பீகார் மாநிலத்தில் உள்ளூர் பாரதிய ஜனதா கட்சி தலைவரின் மகனை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது. (son local BJP leader Gangotri Prasad stabbed)

பீகார் மாநிலத்தில் உள்ளூர் பாரதிய ஜனதா கட்சி தலைவரான கங்கோத்ரி பிரசாத், இவரது மகன் பியூஷ்குமார் இவ்வாறு கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்றிரவு சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது, அங்கு சென்ற கும்பல் ஒன்று அவரை வழிமறித்து, தங்களிடம் இருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினர்.

இதில் படுகாயமடைந்த பியூஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆளும் கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரின் மகன் கொலை செய்யப்ப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதை நிரூபிக்கின்றது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; son local BJP leader Gangotri Prasad stabbed